எஸ்.புதூர்
எஸ்.புதூர் அருகே பொன்னடப்பட்டி கிராமத்தில் உள்ள பாடுவான் குட்டு மலைப்பகுதியில் மாலை 4 மணி அளவில் திடீர் காட்டுத்தீ ஏற்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் வீடுகளில் இருந்த நீரைக் கொண்டு காட்டுத்தீ தொடர்ந்து பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதனை தொடர்ந்து பொன்னமராவதி தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீ கிராம பகுதிக்குள் பரவாமல் முற்றிலுமாக தீயை அனைத்தனர். பொதுமக்கள் முயற்சியால் பெரும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது.