வன பாதுகாப்பு தினம்
டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் வன பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது.
செங்கோட்டை விஸ்வநாதபுரம் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் வன பாதுகாப்பு தினம் கொண்டாடப்பட்டது. பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் மாணவ-மாணவிகளுக்கு மரங்கள் வளர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேசினார்கள். பின்னர் மாணவ- மாணவிகள் கொண்டு வந்திருந்த மரக்கன்றுகளை ஆசிரியர்கள் உதவியுடன் பள்ளி வளாகத்தில் நட்டனர். இதில் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.