திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது.
இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அது மட்டுமின்றி வெளிநாட்டை சேர்ந்த பக்தர்களும் அவ்வபோது வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
இன்று டென்மார்க்கை சேர்ந்த வெளிநாட்டு பயணிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி - சேலையில் அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தனர்..