மாயூரநாதர் கோவிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம்

மயிலாடுதுறை மாயூரநாதர் கோவிலில் வெளிநாட்டினர் சாமி தரிசனம் செய்தனர்

Update: 2023-03-27 18:45 GMT

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நேற்று மலேசியா, ஸ்வீடன், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வெளிநாட்டினர் 74 பேர் வந்தனா். கோவிலில் உள்ள சன்னதிகளில் வழிபாடு செய்த அவர்கள் தமிழகத்தில் உள்ள சித்தர்களின் கோவில்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள வந்துள்ளதாக கூறினர். முன்னதாக கோவில் நிர்வாகிகள் வெளிநாட்டினருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்