ரூ.5.5 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

ரூ.5.5 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2022-07-05 19:56 GMT

செம்பட்டு,ஜூலை.6-

திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு நேற்று முன்தினம் இரவு இண்டிகோ விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக சென்னையைச் சேர்ந்த சவுகத் சாதிக் (வயது 33) என்ற பயணி வந்தபோது அவரை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் உடலில் மறைத்து எடுத்து வந்த ரூ.5.5 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர், சிங்கப்பூர் டாலர், மலேசியன் ரிங்கிட் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து அவரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்