கொளத்தூர் அருகே மேட்டூர் அணை நீர்த்தேக்கப்பகுதிகளில் முகாமிட்டுள்ள வெளிநாட்டு பறவைகள்

கொளத்தூர் அருகே மேட்டூர் அணை நீர் தேக்கப்பகுதிகளில் வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டுள்ளன.

Update: 2023-02-14 22:12 GMT

கொளத்தூர்:

மேட்டூர் அணை

மேட்டூர் அணை கடந்த மாதங்களில் தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பி காணப்பட்டது. இதனால் அணை கடல் போல காட்சி அளித்தது. இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.

நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்குநீர்வரத்து வினாடிக்கு 1,605 கனஅடியாக இருந்தது. அணையின் நீர்மட்டம் 103.85 அடியாக காணப்பட்டது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனிடையே அணையில் இருந்து பாசன தேவைக்காக தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு பறவைகள்

அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் நீர்த்தேக்கப்பகுதிகளில் உழவடை விவசாய பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. நீர்த்தேக்கப்பகுதிகளில் தண்ணீர் வற்றி வருவதால் கரையோரங்களில் சேறும்-சகதியுமாக காட்சி அளிக்கிறது. இந்த இடங்களில் புழு, பூச்சிகள் அதிகமாக உள்ளன. இதை சாப்பிட நீர்த்தேக்க பகுதிகளில் அதிகளவில் நாரைகள் வந்துள்ளன. மேலும் வெளிநாட்டு பறவைகளின் வரத்தும் அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளான கொளத்தூர் அருகே உள்ள பண்ணவாடி பரிசல் துறை, மூலக்காடு ஆகிய இடங்களில் வெளிநாட்டு பறவைகள் காணப்படுகின்றன. இந்த அரிய வகை வெளிநாட்டு பறவைகள் எந்த நாடுகளில் இருந்து வந்தன என்பது தெரியவில்லை. 

மேலும் செய்திகள்