தனியார் நிறுவனத்தின்பெண் ஊழியரை வழிமறித்து ஆசைக்கு இணங்க வற்புறுத்தல்வாலிபர் கைது; மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
தனியார் நிறுவனத்தின் பெண் ஊழியரை வழிமறித்து ஆசைக்கு இணங்க வற்புறுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
விழுப்புரம் அருகே இளங்காடு கிராமத்தை சேர்ந்த கலிவரதன் மகன் அப்பு என்கிற கலைமன்னன் (வயது 30), வளவனூரை சேர்ந்த ரவி மகன் மூர்த்தி ஆகிய இருவரும் இளங்காடு பகுதியில் நின்றுகொண்டிருந்தனர்.
அப்போது புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவர், பணி முடிந்து வீட்டிற்கு செல்ல அவ்வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அப்பு, மூர்த்தி ஆகிய இருவரும் அந்த பெண்ணை வழிமறித்து ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தினர். அதற்கு மறுத்த அப்பெண்ணிடம், இதுபற்றி வெளியில் யாரிடமும் சொன்னால் கொலை செய்து விடுவதாக அவர்கள் இருவரும் மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து அப்பெண், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்புவை கைது செய்தனர். மேலும் மூர்த்தியை போலீசார் தேடி வருகின்றனர்.