3-ம் மண்டல பாசனத்திற்கு பி.ஏ.பி. கிளை கால்வாயில் தண்ணீர் திறப்பு குறித்து ஆலோசனை

3-ம் மண்டல பாசனத்திற்கு பி.ஏ.பி. கிளை கால்வாயில் தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசனை நடந்தது.

Update: 2022-12-22 18:45 GMT

நெகமம்

3-ம் மண்டல பாசனத்திற்கு பி.ஏ.பி. கிளை கால்வாயில் தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசனை நடந்தது.

ஆலோசனை

பி.ஏ.பி. கால்வாய் மூலம் ஏக்கர் கணக்கில் பாசனம் பெறுகிறது. இந்தநிலையில் நெகமம் கோவில்பாளையம் பி.ஏ.பி. கிளை கால்வாயில் இருந்து 3-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நெகமத்தில் நடைபெற்றது.

இதில் கிளை கால்வாயில் வளர்ந்துள்ள செடி- கொடிகளை அகற்றல், தூர்வாரும் பணிகள் மற்றும் நீர் பங்கீட்டு பணிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. கப்பளாங்கரை, தேவணாம்பாளையம், காணியா லம்பாளையம், காளியப்பம்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த நீரினை பயன்படுத்துவோர் சங்கங்களின் பொதுக்குழு உறுப்பினர்கள், தலைவர்கள் மற்றும் ஆட்சி மண்டல குழு உறுப்பினர்கள், விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.

கடைமடை வரை தண்ணீர்

முன்னாள் பகிர்மான குழு தலைவர் ஆண்டிபாளையம் நல்லதம்பி, பாசன சபை விவசாயி சபரி கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் சக்தி குமார், உதவி பொறியாளர் ராஜன், மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் தண்ணீர் திறப்பதற்கு முன் அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். மேலும் கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்