மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தூத்துக்குடிதபால் அலுவலகங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு:தூத்துக்குடி தபால் அதிகாரி தகவல்

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தூத்துக்குடி தபால் அலுவலகங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தூத்துக்குடி தபால் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Update: 2023-09-03 18:45 GMT

மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு தபால் அலுவலகங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக, தூத்துக்குடி தபால் கோட்ட கண்காணிப்பாளர் பொன்னையா தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

வங்கி கணக்கு

'கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற தகுதி உள்ள பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு அவசியம் என்பதால், தகுதி உள்ள பயனாளிகள் அருகில் உள்ள தபால் நிலையங்கள், தபால்காரர், கிராம தபால் ஊழியர் ஆகியோரை அணுகி ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி பயன் பெறலாம். தபால்காரர் மற்றும் கிராம தபால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள ஸ்மார்ட் போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனத்தின் மூலம் பயனாளிகள் தங்களின் ஆதார் மற்றும் செல்போன் எண்ணை மட்டும் பயன்படுத்தி விரல் ரேகை மூலம் ஒரு சில நிமிடங்களில் ஆதார் இணைப்புடன் கூடிய இந்தியா போஸ்ட் பேமெண்டஸ் வங்கி கணக்கு தொடங்க முடியும். இந்த வங்கி கணக்குக்கு இருப்பு தொகை எதுவும் கிடையாது.

சிறப்பு முகாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் இதுவரை சுமார் 16 ஆயிரம் பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் கூடிய வங்கி கணக்கு தொடங்கப்பட்டு உள்ளது. தற்போது ஆதார் எண் விடுபட்டு உள்ள சுமார் 10 ஆயிரம் பயனாளிகளுக்கு வங்கி கணக்கு தொடங்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகம், அனைத்து தாலுகா அலுவலகங்கள், இன்று முதல் வருகிற 9-ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. இந்த முகம்களில் பயனாளிகள் கலந்து கொண்டு வங்கி கணக்கை தொடங்கி பயன்பெறலாம்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்