நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படும் கோதுமை வடமாநிலங்களில் இருந்து சரக்கு ரெயில் மூலம் வாங்கி வரப்படுகின்றன. அந்த வகையில் நேற்று மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து 2,600 டன் கோதுமை சரக்கு ரெயிலில் 46 வேகன்களில் வந்தன.
இந்த கோதுமை மூட்டைகள் 150-க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றி தமிழ்நாடு அரசு சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.