ஐகோர்ட்டு வரலாற்றில் முதல்முறையாக 'சோப்தார்' பதவிக்கு பெண் நியமனம்

ஐகோர்ட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘சோப்தார்' பதவிக்கு பெண் நியமனம்.

Update: 2022-06-09 18:43 GMT

சென்னை,

1862-ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் சென்னை ஐகோர்ட்டு தொடங் கப்பட்டது. 160 ஆண்டுகள் பாரம்பரியமிக்க இந்த ஐகோர்ட்டுக்கு மிகப்பெரிய வரலாறும், பாரம்பரியமும் உள்ளன.

இங்கு ஆங்கிலேயர் உருவாக்கிய ஒவ்வொரு பதவிக்கும், ஒவ்வொரு காரணங்கள் உள்ளன. அதில் ஒன்று 'சோப்தார்' பதவி. இந்த பதவியை வகிப்பவர், நீதிபதிகள் தங்களது சேம்பரில் இருந்து, கோர்ட்டு அறைக்கும், சேம்பரில் இருந்து வீட்டுக்கும் செல்ல, காருக்கு செல்லும்போது, அதாவது ஐகோர்ட்டு வளாகத்தில் நீதிபதிகள் வருவதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக நீதிபதிக்கு முன்பு கையில் செங்கோல் ஏந்தி நடந்து செல்வார்கள். அவர்கள் சீருடையாக வெள்ளை நிற ஆடையும், சிவப்பு நிற தலைப்பாகையும் அணிந்து இருப்பார்கள். 160 ஆண்டுக்கால ஐகோர்ட்டு வரலாற்றில் இந்த பதவியை ஆண்கள் மட்டுமே வகித்து வந்தனர்.

இந்த நிலையில், இந்த பதவிக்கு முதல் முறையாக, திலானி என்ற பெண் நியமிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை ஐகோர்ட்டுக்கு கடந்த ஆண்டு 40 சோப்தார், 310 அலுவலக உதவியாளர் என்று பல பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதில், சோப்தார் பதவிக்கு திலானி தேர்வு செய்யப்பட்டு, அண்மையில் பதவி ஏற்றுள்ளார். இவர், நீதிபதி ஆர்.என்.மஞ்சுளாவுக்கு சோப்தாராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்