மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

பண்டாரஞ்செட்டிவிளையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது.

Update: 2022-12-26 18:45 GMT

உடன்குடி:

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை தூய லூக்கா ஆலயம் சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. சேகர குரு ஜான்சாமுவேல் தலைமை வகித்து ஜெபம் செய்து விழாவினைத் தொடங்கி வைத்தார். விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு மளிகை, காய்கறிகள், புத்தாடைகள் அடங்கிய தொகுப்பு, மாணவர்களுக்கு புத்தாடைகள், கல்வி உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு ஆகியவை வழங்கப்பட்டது. இதில் திருமண்டில பெருமன்ற உறுப்பினர்கள் ஞானதேசிகர், கனகராஜ், செயலர் ராஜ்குமார் பாண்டியன், பொருளாளர் சுதந்திரன் உட்பட சபை மக்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்