பள்ளி மாணவ, மாணவிகளுக்கானதடகள விளையாட்டு போட்டி

பெரியகுளம் அருகே உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரியில், பெரியகுளம் கல்வி மாவட்ட குறுவட்ட தடகள விளையாட்டு போட்டி நடைபெற்றது.

Update: 2023-09-08 18:45 GMT

பெரியகுளம் அருகே உள்ள அரசு தோட்டக்கலை கல்லூரியில், பெரியகுளம் கல்வி மாவட்ட குறுவட்ட தடகள விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பெரியகுளம், தாமரைக்குளம், லட்சுமிபுரம், சருத்துப்பட்டி, கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, வடுகப்பட்டி, ஜெயமங்கலம், குள்ளப் புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 24 அரசு மற்றும் தனியார் பள்ளி அணிகள் பங்கேற்றன. இதில் 750 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 800 மீட்டர், 1600 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள், மற்றும் குண்டு எறிதல், வட்டு எறிதல், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.

இந்த போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் விளையாடினர். இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதற்கு முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) வசந்தா, மாவட்ட உடற்கல்வி கல்வி ஆய்வாளர் குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையடுத்து வெற்றி பெற்ற அணிகள் மற்றும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்