பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேர் கைது

ஆலங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-03-17 18:45 GMT

ஆலங்குளம்:

ஆலங்குளம் போலீசார் காமராஜர் நகர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து விசாரித்த போது, அதில் ஒருவன் தப்பியோட முயற்சி செய்தான். அவனை மடக்கிப் பிடித்த போலீசார் 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த முத்துராமன் (வயது 24), மாரி செல்வம் (25) மற்றும் அருணாசலம் (22) ஆகியோர் என்பதும், அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது சிறுசிறு பொட்டலங்களாக 320 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பாக்கெட் ஒன்று 500 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இதுதொடர்பாக சொக்கலிங்கம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்