கோவில்பட்டியில்தொடக்கப்பள்ளிமாணவர்களுக்கு ஆங்கிலத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி
கோவில்பட்டியில்தொடக்கப்பள்ளிமாணவர்களுக்கு ஆங்கிலத்தை கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 13 பஞ்சாயத்து யூனியன்களிலுள்ள தொடக்கப்பள்ளிகளில் 1-ம் வகுப்பு, 2-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலம் பாடத்தை 1,354 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ரெஜினி ஏற்பாடு செய்தார். இதன்படி இந்த ஆசிரியர்களுக்கு ஜூலை 24 முதல் ஆக. 24-ந் தேதி வரை 20 கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட்டது. சென்னையில் இருந்து வந்திருந்த 4 கருத்தாளர்கள் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சி நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று கோவில்பட்டி நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட உதவி திட்ட அலுவலர்கள் முனியசாமி, ஜெயக்குமார், ஒருங்கிணைப்பாளர்கள் முத்துஸ்ரீவரமங்கை, சத்தியசீலன், கருத்தாளர்கள் ஜானகி, ஹரிணி, அபர்ணா, பால்சரண் ஆகியோர் கலந்து கொண்டனர்.