ஒடிசா ரெயில் விபத்தில் பலியான பயணிகளுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி

ஒடிசா ரெயில் விபத்தில் பலியான பயணிகளுக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2023-06-05 21:19 GMT

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், ஒடிசா மாநிலத்தில் நடந்த ரெயில் விபத்தில் பலியான பயணிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஈரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஆர்.கே.சண்முகவேல் தலைமை தாங்கினார். செயலாளர் ராமசந்திரன், பொருளாளர் உதயம் பி.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கலந்து கொண்டவர்கள், ரெயில் விபத்தில் இறந்த பயணிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தியதுடன், காயம் அடைந்த பயணிகள் விரைவில் குணமடைய வேண்டும் என்று சிறப்பு பிரார்த்தனையும் செய்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ராஜா, செயலாளர் அ.லாரன்ஸ் ரமேஷ், பாலகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்