வீட்டு குடிநீர் இணைப்புக்கு பொதுமக்கள் பங்களிப்பு தொகை செலுத்த வேண்டும் கலெக்டர் தகவல்
கலெக்டர் தகவல்
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு பொது பிரிவு குக்கிராமங்களுக்கு மொத்த மதிப்பீடு தொகையில் 10 சதவீதமும், இதர எஸ்.சி., எஸ்.டி., மலைவாழ் மற்றும் வனப்பகுதி குக்கிராமங்களுக்கு மொத்த மதிப்பீடு தொகையில் 5 சதவீதமும் பொதுமக்கள் பங்களிப்பு தொகையினை பணமாகவோ, பொருளாகவோ அல்லது உடல் உழைப்பின் மூலமாகவோ செலுத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்து உள்ளார்.