தூய்மை பணியாளர் மகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம்
தேனியில் தூய்மை பணியாளர் மகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது.
ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றிய பாண்டி கடந்த ஜனவரி மாதம் பணியின் போது உயிரிழந்தார். அவருடைய மகள் சுபலட்சுமி, தங்களின் குடும்பம் வறுமையில் உள்ளதால் கருணை அடிப்படையில் வேலை கேட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவின் மீது மாவட்ட கலெக்டர் முரளிதரன் பரிசீலனை செய்து, சுபலட்சுமிக்கு கருணை அடிப்படையில் கோம்பை பேரூராட்சி அலுவலகத்தில் காலியாக இருந்த அலுவலக உதவியாளர் பணியிடத்தில் வேலை கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.
இதையடுத்து அவருக்கு அலுவலக உதவியாளர் பணி வழங்கப்பட்டது. தேனியில் நடந்த நிகழ்ச்சியில் இதற்கான பணி நியமன உத்தரவை சுபலட்சுமியிடம், கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி வழங்கினார். அப்போது மாவட்ட கலெக்டர் முரளிதரன், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பொறுப்பு) ராஜாராம் உள்பட பலர் உடனிருந்தனர்.