கல்லூரி மாணவ- மாணவிகளுக்கானஇலக்கியத்திருவிழா
தஞ்சையில் வருகிற 15-ந்தேதி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான இலக்கியத்திருவிழா நடைபெறுகிறது. இதில் கவிதை, கட்டுரை, பாட்டு, பேச்சுப்போட்டியில் பங்கேற்க, கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
தஞ்சையில் வருகிற 15-ந்தேதி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான இலக்கியத்திருவிழா நடைபெறுகிறது. இதில் கவிதை, கட்டுரை, பாட்டு, பேச்சுப்போட்டியில் பங்கேற்க, கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்.
இலக்கியத்திருவிழா
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு பொது நூலகத்துறை சார்பில் தமிழ்நாட்டின் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தஞ்சை ஆகிய 5 இடங்களில் இலக்கியத் திருவிழா நடைபெறுகிறது. இதில் தஞ்சை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து காவிரி இலக்கியத் திருவிழா நடைபெற உள்ளது. இவ்விழாவினை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணி முதல் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி கூடலரங்கில் அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது.
இதில் கவிதைப் போட்டி "காவிரியைப் போற்றுவோம்" என்ற தலைப்பிலும், பேச்சுப் போட்டி"தமிழ் இலக்கியங்களில் தமிழர் மரபு என்ற தலைப்பிலும் கட்டுரைப் போட்டி"தமிழர் பண்பாடே சமுத்துவப் பண்பாடு" "நாணி போற்றும் தமிழர் பண்பாடு" என்ற தலைப்பிலும் பாட்டுப்போட்டி"மண்ணின் மணம் கமழும் மக்கள் பாடல்கள்" "சோழமண்டல நாட்டுப்புறப் பாடல்கள்" என்ற தலைப்பிலும் நடைபெறுகிறது.
கல்லூரி மாணவர்கள்
ஒரு போட்டிக்கு ஒரு கல்லூரியிலிருந்து ஒரு மாணவர் மட்டுமே பங்கு பெறலாம். இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவ மாணவிகள் தங்களது பெயரினை இன்றுக்குள் (திங்கட்கிழமை) ஒருங்கிணைப்பாளருக்கு மின்னஞ்சலில் sathiyamoorthy6932@gmail.com அனுப்ப வேண்டும். போட்டி நடைபெறும் நாளன்று காலை 10 மணிக்குள் கல்லூரிக்கலையரங்கத்திற்கு மாணவர்கள் வர வேண்டும்.
இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பொது நூலகத்துறை சார்பில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் மற்றும் சான்றிதழும் வழங்கப்படும். இப்போட்டி குறித்த விவரங்களை 9751806932 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறியலாம்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.