6 லாரிகளுக்குரூ.2¼ லட்சம் அபராதம்

6 லாரிகளுக்கு ரூ.2¼ லட்சம் அபராதம்

Update: 2023-01-22 19:59 GMT

குலசேகரம்:

நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு தினமும் கனரக வாகனங்களில் ஜல்லி, பாறைப்பொடி பேன்றவை ஏற்றி செல்லப்படுகிறது.

இந்த நிலையில் குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் இரவு குலசேகரம் அரசமூடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கனிமவளப் பொருட்களை ஏற்றி வந்த 6 லாரிகளை தடுத்து நிறுத்தி சோதனையிட்ட போது அவற்றில் அதிகபாரம் ஏற்றி வந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து. 6 லாரிகளுக்கும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்