அதிக பாரம் ஏற்றிய 18 லாரிகளுக்கு ரூ.13 லட்சம் அபராதம்

தக்கலையில் அதிக பாரம் ஏற்றிய 18 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து ரூ.13 லட்சம் அபராதம் விதித்தனர்.

Update: 2022-10-14 18:45 GMT

தக்கலை,

தக்கலையில் அதிக பாரம் ஏற்றிய 18 லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து ரூ.13 லட்சம் அபராதம் விதித்தனர்.

கனிம வளங்கள் கடத்தல்

குமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ஜல்லி, எம்சாண்ட், பாறைக்கற்கள் போன்ற கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகிறது. இவற்றை லாரிகளில் அதிக பாரத்துடன் ஏற்றி செல்வதாகவும், இதனால் சாலைகள் விரைவில் சேதமடைவதுடன் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் கூறுகிறார்கள். இதையடுத்து போலீசார் மற்றும் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தி அதிக பாரத்துடன் செல்லும் லாரிகளை பறிமுதல் செய்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

வாகன சோதனை

இந்தநிலையில் தக்கலை பழைய பஸ் நிலையம் அருகே நேற்று காலையில் கனிமவள கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் திலீபன் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கனிம வளங்களை ஏற்றி வந்த லாரிகளை நிறுத்தி சோதனையிட்ட போது அதிக பாரத்தில் எம்சாண்ட் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவற்றை கேரளாவுக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அதிக பாரத்துடன் வந்த 18 லாரிகளை பறிமுதல் செய்து மொத்தம் ரூ.13 லட்சம் அபராதம் விதித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்