கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்துக்கு அலட்சியமே காரணம்: சீமான்
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்ற கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னை,
சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கால் துண்டிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்ற கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சீமான் கூறியிருப்பதாவது:
கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா மரணத்துக்கு அரசு ஆஸ்பத்திரியின் அலட்சியமும், தரமற்ற தன்மையுமே காரணம். இதனால் விலை மதிப்பற்ற ஒரு உயிர் அநியாயமாக பறிக்கப்பட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு காரணமாக டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பிரியாவின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.