சிங்கம்புணரி
சிங்கம்புணரியில் முன்னாள் அமைச்சர் மாதவன் 90-வது ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு என்பீல்டு பகுதியில் மாதவன் நிறுவிய பாரி வள்ளல் மெட்ரிக் பள்ளியில் மாதவன் கால்பந்து கழகம் சார்பில் 3-வது ஆண்டு மாநில கால்பந்து போட்டி தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு பள்ளியின் தலைவரும், முன்னாள் அமைச்சர் மாதவன் மகளுமான வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். மாதவன் மகன் அருளாளன் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாளர்கள் கிருஷ்ணன், சரவணன், பள்ளி முதல்வர் ஷாம் பிராங்கின் டேவிட் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக பேராசிரியர் ராமராஜபாண்டியன் கலந்து கொண்டு முதல் போட்டியை தொடங்கி வைத்தார். போட்டியில் 16 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. முன்னதாக மாணவ-மாணவியருக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன. கால்பந்து போட்டியில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) இறுதிப்போட்டி நடக்கிறது. இதல் வெற்றி பெற்ற அணிகளுக்கு அமைச்சர் பெரியகருப்பன் பரிசு வழங்க உள்ளார். முதல் நாள் நிகழ்ச்சியில் தொழிலதிபர் மணிமாறன், சரவணன், காந்திமதி நகை மாளிகை உரிமையாளர் சிவக்குமார், ரெங்கநாதன் காந்திமதி கோல்டன் பேலஸ் ஆனந்த் கிருஷ்ணன், புசலியம்மாள் மருத்துவமனை சிறப்பு அறுவை சிகிச்சை மருத்துவர் ராஜ்குமார், தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளர் பூமிநாதன், பேரூராட்சி மன்ற தலைவர் அம்பலமுத்து, துணை தலைவர் இந்தியன் செந்தில், நகர செயலாளர் கதிர்வேல், பொதுக்குழு உறுப்பினர் சோமசுந்தரம், தொழிலதிபர் கணேசன், ஒன்றிய துணைச் செயலாளர் சிவபுரி சேகர், அயலக அணியின் மாவட்ட துணை செயலாளர் புகழேந்தி, ஒன்றிய பொருளாளர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.