மாநில அளவிலான கால்பந்து போட்டி

மாநில அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.

Update: 2023-01-22 18:45 GMT

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. போட்டி தொடக்க விழாவுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமஅருணகிரி தலைமை தாங்கினார். கிராம அம்பலக்காரர் சத்தியசீலன் முன்னிலை வகித்தார். சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 16 அணிகள் கலந்து கொண்டன. போட்டியை பேரூராட்சி மன்ற துணை தலைவர் இந்தியன் செந்தில் தொடங்கி வைத்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் முதல் பரிசை சென்னை அணி கைப்பற்றியது. இரண்டாம் பரிசை திருச்சி இனாம்குளத்தூர் அணியும், மூன்றாம் பரிசை மேலூர் அணியும், நான்காம் பரிசை சிங்கம்புணரி நரேன் ஐ.எப்.ஏ.சி. அணியும் பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் கோப்பைகள், சான்றிதழ் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி நரேன் ஐ.எப்.ஏ.சி. ஜூனியர் கால்பந்து கிளப் செய்திருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்