சத்துணவு ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

Update: 2023-08-31 18:45 GMT

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் காலை உணவு திட்டத்தினை சத்துணவு ஊழியர் மூலம் செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு மடியேந்தும் போராட்டம் நடத்தினா். மாவட்ட தலைவர் பாண்டி தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் பாலசுப்ரமணியன், செல்வராணி, பாண்டிமா தேவி, ஜெயபாரதி, மாவட்ட இணை செயலாளர் தென்றல், முன்னாள் மாநில துணை தலைவர் பாண்டி, சீமைச்சாமி, மாரி, கார்த்தி, சின்னப்பன், முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ரத்த கையெழுத்திட்ட நகலை கலெக்டரிடம் ஒப்படைத்து தமிழ்நாடு முதல்-அமைச்சருக்கு அனுப்ப வேண்டியும் பெருந்திரள் முறையீடு போராட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பாக குமரேசன் தலைமையில் நடைபெற்றது. மங்கையர்க்கரசி, அலமேலு மங்கை, சரவணன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஷீலா கோரிக்கை விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர்கள் சங்க செயலாளர் ஜெயபிரகாஸ், சுரேஷ், அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் சங்கர சுப்பிரமணியன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை குணசேகரன், பிச்சை, பூமி ராஜ், இந்திரா, லல்லி, மகாலட்சுமி, தமிழரசிஜோதி, அலமேலு மங்கை, கண்ணகி, செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் பார்த்திமா நன்றி கூறினார். இறுதியில் ரத்த கையொப்பமிட்ட நகலை கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் அளித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்