சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-05-29 19:15 GMT

அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜவேம்பு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேக் தாவூர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியரிடம் வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேல் பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பி பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். 

Tags:    

மேலும் செய்திகள்