சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Update: 2023-05-26 19:23 GMT

தமிழ்நாடு அரசு சத்துணவு பணியாளர் சங்கம் சார்பில் தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட துணைத் தலைவர் இந்திராகாந்தி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ராமலிங்கம், மாவட்ட இணைச் செயலாளர் மரியகிறிஸ்டி அல்போன்ஸ், முன்னாள் ஒன்றிய தலைவர் சரோஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ஆறுமுகம் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், பள்ளிகளில் வழங்கப்படும் காலை சிற்றுண்டி திட்டத்தை மகளிர் குழுக்கள் மூலம் செயல்படுத்தாமல், சத்துணவு திட்டத்தில் இணைத்து சத்துணவு பணியாளர்கள் மூலம் வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஒன்றிய தலைவர்கள் கற்பகம், ஜெயசீலி, ஜீவா, மாவட்ட இணை செயலாளர் ஜெயந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்