சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-04-15 18:45 GMT

ஊட்டி, 

அனைத்து சத்துணவு ஊழியர்களையும் முழு நேர ஊழியராக அறிவிக்க வேண்டும், காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் விஜயா தலைமை தாங்கினார். செயலாளர் செல்லதுரை, பொருளாளர் சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு மையத்துக்கு வழங்கும் காய்கறி, மளிகை, எரிபொருள் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அரசே வழங்க வேண்டும். காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை தமிழக அரசு நடத்த வேண்டும். சத்துணவு ஊழியர்கள் கூடுதல் பொறுப்பு மையம் சிற்றுண்டி உணவு திட்டத்தை தமிழக அரசு நடத்த வேண்டும். ஓய்வு பெற்ற அனைத்து ஊழியர்களுக்கும் பொது வருங்கால வைப்பு நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தினர். 

Tags:    

மேலும் செய்திகள்