சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கொள்ளிடத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராமதேவன் தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற ஊழியர் சங்க தலைவர் சுந்தரமூர்த்தி மற்றும் வட்டார அளவிலான சத்துணவு அமைப்பாளர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். 38 ஆண்டுகளாக நிரந்தரமாக சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் காலை சிற்றுண்டியை சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.