சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கமுதி, சாயல்குடியில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2023-02-06 18:23 GMT

கமுதி, 

கமுதி வட்டார சத்துணவு ஊழியர் சங்க கிளை மூலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கணேசன் தலைமை தாங்கினார். வட்டார தலைவர் மூக்கூரான், பொருளாளர் ராஜேந்திரன், அமைப்பாளர் எருமகுளம் காளிமுத்து, மாவட்ட துணைத்தலைவர் முத்துலட்சுமி, ஓய்வூதியர் கருத்துடையான், சுரேஷ், வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் காலை சிற்றுண்டி திட்டத்தை தனியார் மயமாக்கக்கூடாது. அகவிலைப்படியுடன் குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கடலாடி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு ஊழியர் சங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கடலாடி சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய தலைவர் வெள்ளையம்மாள் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் பொன்னான்டி, ஒன்றிய பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாவட்ட தலைவர் முருகேசன் வரவேற்றார். இ்தில் மாவட்ட துணைச்செயலாளர் கங்காதேவி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மேனகா, கடலாடி ஒன்றிய துணை செயலாளர் சித்ரா, உள்ளிட்ட சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்