சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சத்துணவு ஊழியா்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-08-19 19:08 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மகேஸ்வரி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் ஜெயபிரபா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூங்காவு, கிளைச்செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்த ராஜ்குமார், அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை பொருளாளர் அற்புதராஜ், மாவட்ட தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட செயலாளர் முத்து வெள்ளையப்பன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும். சத்துணவு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது. முடிவில் கிளை பொருளாளர் ரமணி நன்றி கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண் ஊழியர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்