சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம்

வேலூரில் சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-27 17:41 GMT

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பியூலா எலிசபெத்ராணி தலைமை தாங்கினார். திருப்பத்தூர் மாவட்ட தலைவர் வித்தியாவதி வரவேற்றார். மாவட்ட தலைவர் சேகரன் விளக்க உரையாற்றினார். அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் சரவணராஜ் தொடங்கி வைத்து பேசினார்.

போராட்டத்தில், காலை சிற்றுண்டி திட்டத்தை தற்போது பணிபுரியும் சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர், சமையல் உதவியாளர் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62-ஆக மாற்ற வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ஓய்வூதியம் ரூ.6,850 வழங்க வேண்டும். காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் வேலூர் மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்