உணவு பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம்
உணவு பொருள் வழங்கல் குறைதீர் கூட்டம் இன்று நடக்கிறது.
அரியலூர் மாவட்டத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சம்பந்தமான பொது மக்கள் குறைதீர் கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்கள் விவரங்கள் வருமாறு:-
அரியலூர் தாலுகாவிற்கு சிறுவளூர் கிராமத்திலும், உடையார்பாளையம் தாலுகாவில் வெண்மான்கொண்டானிலும் (கிழக்கு), செந்துறை தாலுகாவில் இரும்புலிக்குறிச்சியிலும், ஆண்டிமடம் தாலுகாவில் வரதராஜன்பேட்டையிலும் என 4 கிராமங்களில் இந்த முகாம் நடைபெறவுள்ளது.
கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம். மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் படி பயன்பெறலாம், என்று கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.