வேளாங்கண்ணி ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

வேளாங்கண்ணி ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

Update: 2022-06-29 15:38 GMT

வேளாங்கண்ணி ஓட்டல்களில் விற்பனைக்காக வைக்கப்பட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான கெட்டுப்போன பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆய்வு

வேளாங்கண்ணியில் உள்ள ஓட்டல்களில் நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஓட்டல்களில் 75 கிலோ மீன், இறைச்சிகள், 20 கிலோ கெட்டுப்போன உயர்தர உணவு பொருட்கள் என ரூ.1 லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவு பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். அதேபோல தரம் குறைந்த மீன்கள் விற்பனை செய்த 10 கடைகளுக்கு தலா ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

எச்சரிக்கை

உணவு பாதுகாப்பு துறையினர் உரிமம் பெறாத கடைகளில் வியாபாரம் செய்தால் கடைக்கு சீல் வைக்கப்பட்டு கோர்ட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஓட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். ஆய்வின்போது பேரூராட்சி அலுவலர்கள், சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்