உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் சோதனை
உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தினர்.
விருதுநகர் நகர் பகுதியில் உணவு பாதுகாப்பு துறை மற்றும் நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் நகர் பகுதியில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அப்போது பழக்கடைகளில் கெட்டுப்போன மாம்பழங்கள், கல் வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. பல்வேறு கடைகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு ரூ. 11,500 அபராதம் விதிக்கப்பட்டது. தொடர்ந்து சோதனைகள் நடத்தப்படும் என்று நகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.