மாவட்ட தொழில் மையம் சார்பில் உணவுத்தொழில் சார்ந்த முதலீட்டாளர்கள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

மாவட்ட தொழில் மையம் சார்பில் உணவுத்தொழில் சார்ந்த முதலீட்டாளர்கள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

Update: 2023-08-31 18:45 GMT

முதலீட்டாளர்கள் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திண்டிவனம் சிப்காட் மற்றும் மாவட்ட தொழில் மையம் சார்பில் மாவட்ட அளவிலான உணவுத்தொழில் சார்ந்த முதலீட்டாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். சிப்காட் செயல் இயக்குனர் ஆகாஷ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பழனி பேசியதாவது:-

தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழிலை ஊக்குவிக்கும் விதமாக திண்டிவனம், மணப்பாறை, தேனி ஆகிய இடங்களில் உணவு தொழிற்பூங்காக்கள் சிப்காட் மூலமாக அமைக்கப்படுமென தமிழ்நாடு அரசு அறிவித்து அதற்கான அரசாணை 11.10.2021 அன்று வெளியிடப்பட்டது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 158.26 ஏக்கர் பரப்பளவில் ரூ.165 கோடியே 11 லட்சம் திட்ட மதிப்பீட்டில் அமையவுள்ள சிப்காட் உணவு தொழிற்பூங்காவிற்கு முதலீட்டாளர்களை ஈர்க்கும் விதமாக தமிழ்நாடு வேளாண் மதிப்புக்கூட்டல் மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு முகமை, மாவட்ட தொழில் மையம் மற்றும் சிப்காட் ஒருங்கிணைப்பில் முதலீட்டாளர் ஒருங்கிணைப்புக்கூட்டம் நடந்தது.

வேலைவாய்ப்பு

மாவட்டத்தில் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் அமைக்கப்படுவதற்கான சாதகமான சூழல்களை விளக்கியதோடு மாவட்டத்தில் ஆர்வமுள்ள தொழில் அதிபர்கள் முதலீடு செய்து தொழில் வளமும்,வேலைவாய்ப்பும் பெருக உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனை தொடர்ந்து மாவட்ட அரிசி ஆலை சங்க பிரதிநிதிகள், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் ஆர்வமிக்க தொழில்முனைவோர் கலந்து கொண்டு தொழிற்பூங்கா குறித்த தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அருள், சிப்காட் உதவி பொது மேலாளர் பாலு உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்