ஆதரவற்றோருக்கு உணவு

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஆதரவற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது

Update: 2022-11-27 21:49 GMT

இட்டமொழி:

நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா நடைபெற்றது. நாங்குநேரி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எஸ்.சுடலைக்கண்ணு தலைமை தாங்கி நாங்குநேரி ஓசானம் அன்பு இல்லத்தில் ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினார். மேலும் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு ஊர்களில் கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். செண்பகராமநல்லூர் ஜெகநாதபெருமாள் கோவிலில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சிறப்பு யாகசாலை பூஜை மற்றும் அர்ச்சனை செய்தார்.

விழாவில் மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி சின்னத்துரை, நாங்குநேரி யூனியன் துணைத்தலைவர் இசக்கிப்பாண்டி, மாவட்ட பிரதிநிதிகள் லிங்கேசன், சண்முகசுந்தரம், ஆறுமுகம், கிட்டு, நிர்வாகிகள் மாயகிருஷ்ணன், சங்கரபாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்