பக்தர்களுக்கு அன்னதானம்
ஆழ்வார்குறிச்சியில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கடையம்:
ஆழ்வார்குறிச்சியில் சிவசைலநாதர் ேகாவில் தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன், ஆழ்வார்குறிச்சி பேரூர் கழகச் செயலாளர் அழகேசன், அவைத்தலைவர் அல்லாபிச்சை, துணைச் செயலாளர்கள் ஆர்.எஸ்.பாண்டியன், சகுந்தலா, கவுன்சிலர்கள் சக்தி சுப்பிரமணியன், மீரா ஒலி, சந்திரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புகாரி மீராசாகிப், மாரியப்பன், சைலப்பன், வெங்கடாசலம், சசிகுமார், அர்ஜூனன், அரவிந்த், செல்லப்பா, கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.