பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம்

பழனி மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Update: 2023-03-11 16:25 GMT

பழனியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த திருவிழாவில் கடந்த 7-ந்தேதி திருக்கல்யாணம், 8-ந்தேதி தேரோட்டம் நடைபெற்றது. அத்துடன் திருவிழாவும் நிறைவு பெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் பழனி மாரியம்மன் கோவிலில் மாசித்திருவிழா முடிந்த பிறகு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழாவையொட்டி நேற்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், பழனி மாவட்ட வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் சரவணன், வணிகர் சங்க பேரமைப்பின் கவுரவ தலைவர் ஹரிஹரமுத்து ஆகியோர் கலந்துகொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வக்கீல் மணிகண்ணன், பழனி வணிகர் சங்க பேரமைப்பின் நிர்வாகி கண்ணுச்சாமி, பழனி நகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ், பத்மினி முருகானந்தம், புஷ்பலதா கார்த்திகேயன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்