பாத யாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம்
சிவகிரியில் பாத யாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சிவகிரி:
சிவகிரி அருகே ராமநாதபுரம் பழனி முருகன் பாதயாத்திரை குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பா.ஜ.க. வெளிநாடு வாழ் மக்கள் மாநில துணை தலைவர் ஆனந்தன் அன்னதானத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் சிவகிரி அருகே தென்மலையில் இந்து நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவிலில் 4-ம் ஆண்டு மகா வருசாபிஷேகம், 108 சங்காபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆனந்தன் தலைமை தாங்கினார்.
இதில் ஒன்றிய தலைவர் சோழராஜன், ஒன்றிய பொருளாளர் மாடசாமி, ஆசிரியர் கிருஷ்ணசாமி, சங்கரநாராயணன், மாவட்ட இளைஞரணி பொதுச்செயலாளர். நீராத்துலிங்கம், தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.