நெல்லையப்பர் கோவிலில் 500 பேருக்கு அன்னதான திட்டம்; சபாநாயகர் மு.அப்பாவு தொடங்கி வைத்தார்

நெல்லையப்பர் கோவிலில் விரிவுபடுத்தப்பட்ட 500 பேருக்கான அன்னதான திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

Update: 2022-07-03 18:21 GMT

நெல்லையப்பர் கோவிலில் விரிவுபடுத்தப்பட்ட 500 பேருக்கான அன்னதான திட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.

500 பேருக்கு அன்னதானம்

நெல்லை மாவட்டத்தில் 20 கோவில்களில் அன்னதான திட்டம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் தினமும் 1,100 பேர் பயன் அடைந்து வருகிறார்கள்.

இதில் நெல்லையப்பர்-காந்திமதி அம்மன் கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் அன்னதான திட்டம் தொடங்கப்பட்டு தினமும் 100 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சட்டமன்ற பேரவையில் தற்போது வழங்கப்பட்டு வரும் அன்னதான திட்டத்தை விரிவுபடுத்தி, முக்கிய திருவிழா நாட்களில் தினமும் 500 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

தொடக்க விழா

அதன்படி நெல்லையப்பர் கோவில் ஆனித்தேர் திருவிழா நேற்று தொடங்கி உள்ள நிலையில், 500 பேருக்கு விரிவுபடுத்தப்பட்ட அன்னதான திட்டமும் தொடங்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு பக்தர்களுக்கு உணவு வழங்கி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமணன், மாலை ராஜா, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் கவிதா, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, கண்காணிப்பாளர் சுப்புலட்சுமி, ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் தி.மு.க. மாநகராட்சி கவுன்சிலர் தச்சை சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன் மற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்