உணவு வினியோகிக்கும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

வேலூரில் உணவு வினியோகிக்கும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-22 16:50 GMT

தமிழ்நாடு உணவு மற்றும் இதரபொருட்கள் வினியோகிக்கும் ஊழியர்கள் சங்கம் வேலூர் மாவட்டம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. சங்க மாநில துணைத்தலைவர் கார்த்தி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சந்தோஷ்குமார் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் பழைய முறையில் ஊதியம் வழங்க வேண்டும். புதிய ஊதிய முறையை திரும்ப பெற வேண்டும். மூத்த டெலிவரி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாத ஊக்கத்தொகையை மீண்டும் வழங்க வேண்டும். ஒரு உணவு ஆர்டருக்கு குறைந்தபட்சம் ரூ.30 வழங்க வேண்டும். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10 வழங்க வேண்டும். காத்திருப்பு கட்டணத்தை ஆர்டர் தொகையுடன் இணைக்காமல் தனியாக வழங்க வேண்டும். டெலிவரி ஊழியர்கள் விபத்தில் சிக்கினால் சம்பந்தப்பட்ட மேலாளர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட டெலிவரி ஊழியர்களுக்கு நிறுவனத்தின் செலவில் மருத்துவ உதவி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி உணவு மற்றும் இதரபொருட்கள் வினியோகிக்கும் ஊழியர்கள் சங்கத்தினர் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்