நெல் பயிரில் இலை வழி உரம்
திரட்சியான மணிகள் பிடிக்க நெல் பயிரில் இலை வழி உரம் என வேளாண் அலுவலர் அறிவுரை வழங்கியுள்ளார்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் வட்டார வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அலுவலர் அரவிந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நெல் மணிகள் திரட்சியாக இருப்பதற்கு உரிய எருவிடுவது அவசியமாகும். நெல் பயிரில் திரட்சியான மணிகள் பிடிப்பதற்கு இலை வழி உர தெளிப்பு முக்கிய மற்றும் எளிமையானதும் ஆகும். மோனோ அம்மோனியம் பாஸ்பேட் 2 சதவீதம் மற்றும் பொட்டாஷியம்குளோரைடு ஒரு சதவீதம் அல்லது 6-பென்சிலமினோபியூரின் 30 பி.பி.எம். என்ற அளவில் ஊட்டச்சத்து மற்றும் வளர்ச்சி ஊக்கிகளை இலைவழி தெளிப்பதன் மூலம் திரட்சியான மணி பிடிப்பதை ஊக்குவிக்கின்றது. இவ்வாறு தெளிப்பு செய்வதனால் உர உபயோகத்திறன் அதிகரிக்கிறது. இந்த இலை வழி உரமிடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகள் தொடர்ச்சியான நெல்மணிகளை பெற்று பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள வேளாண் உதவி அலுவலர்களை தொடர்பு கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம். இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.