விவசாயிகளுக்கு தீவன புல் வளர்ப்பு பயிற்சி
தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில் விவசாயிகளுக்கு தீவன புல் வளர்ப்பு பயிற்சி நடந்தது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு கிராமத்தில் அட்மா திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு தீவன புல் வளர்ப்பு பயிற்சி நடைபெற்றது. பயிற்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் வனஜா சண்முகம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் அழகேசன் முன்னிலை வகித்தார். இதில் கால்நடைத்துறை அலுவலர் டாக்டர் முருகேசன் கலந்துகொண்டு கால்நடை தீவன புல் வளர்ப்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில் தேத்தாக்குடி வேளாண்மை உதவி அலுவலர் சிவானந்தம், தோட்டக்கலை உதவி அலுவலர் ஞானசேகரன், உதவி வேளாண்மை அலுவலர் கந்தசாமி உள்பட கால்நடை துறை அலுவலர்கள் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார் வரவேற்றார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரஞ்சித், மோகன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் தேத்தாக்குடி தெற்கு ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் கிராம விவசாயிகள் கலந்து கொண்டனர்.