11 ஏக்கர் நிலப்பரப்பில் தீவன பயிர் வளர்க்கும் திட்டம்

விருத்தாசலத்தில் 11 ஏக்கர் நிலப்பரப்பில் தீவன பயிர் வளர்க்கும் திட்டத்தை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தார்

Update: 2022-12-16 18:45 GMT

விருத்தாசலம்

தீவன பயிர்கள்

விருத்தாசலம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட எருமனூர் ஊராட்சியில் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் 11 ஏக்கர் நிலத்தை ஊராட்சி நிர்வாகம் மீட்டு அதில் கால்நடை தீவன பயிர்கள் வளர்க்கும் திட்டத்தை அமல்படுத்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதில் காய்கறி வகைகள், பழ வகைகள், கீரை வகைகள் மற்றும் அகத்தி, வேம்பு, கோ-4 உள்ளிட்ட தீவன பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இதை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விதை விற்பனை

தொடர்ந்து தீவன பயிர் மற்றும் விதைகளை விற்பனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு எருமனூர் ஊராட்சி மன்ற தலைவர் சவுமியா வீரமணி தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர் மலர், துணை தலைவர் பூங்கோதை, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதிகா, தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகளுக்கு தீவன பயிர் மற்றும் விதை விற்பனையை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

இதில் கூடுதல் கலெக்டர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், கவுன்சிலர்கள் சரவணன், பச்சமுத்து, துணை தலைவர் திருமலை மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக பண்ணை குட்டைகளை பார்வையிட்ட கலெக்டர் அவற்றை பராமரிக்கும் முறைகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

வளர்ச்சி திட்டப்பணிகள்

தொடர்ந்து சின்னபரூர், விசலூர், விஜய மாநகரம், பெரிய வடவாடி ஆகிய கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பாலசுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்