பறக்கும் படையினர் கண்காணிப்பு
பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு 12 வழித்தடங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு மையங்களுக்கு 11 வழித்தடங்களிலும் வினாத்தாளை பாதுகாப்பான முறையில் எடுத்துச்செல்ல வழித்தட அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்த தேர்வுக்கு அறை கண்காணிப்பாளர்களாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
தேர்வில் துண்டுச்சீட்டு வைத்து எழுதுதல், காப்பி அடித்தல், ஆள்மாறாட்டம் செய்தல், விடைத்தாள்-வினாத்தாளை மாற்றி எழுதுதல் உள்ளிட்டவற்றை கண்காணிக்க பெரம்பலூர் மாவட்டத்தில் 68 பறக்கும் படையினரும், அரியலூர் மாவட்டத்தில் 86 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டு தேர்வு மையங்களை சுற்றி சுற்றி வந்து கண்காணித்தனர். காலை 10.15 மணிக்கு தொடங்கிய தேர்வு, மதியம் 1.15 மணிக்கு முடிவடைந்தது.