சென்னை கடற்கரை-சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவை அடுத்த ஆண்டு ஜனவரி 31 வரை ரத்து..!

4-வது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை - சேப்பாக்கம் பறக்கும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-06-01 04:25 GMT

சென்னை,

சென்னை சென்ட்ரலில் இட நெருக்கடி நிலவுவதால் பலவிரைவு ரெயில்கள் எழும்பூரில் இருந்து இயக்கப்படுகின்றன. எனவே, ரெயில் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில், கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கப்பட உள்ளது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரெயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ரூ.96.70 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இந்த திட்டத்தை வேகமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், 4-வது வழித்தட பணிகளுக்காக சென்னை கடற்கரை - சேப்பாக்கம் இடையே பறக்கும் ரெயில் சேவை வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அடுத்த ஆண்டு 2024 ஜனவரி 31-ம் தேதி வரை 7 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சேப்பாக்கத்தில் இருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரெயில்கள் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்