மோட்டார்சைக்கிள் மீது திராவகம் வீச்சு

சங்கரன்கோவிலில் அ.தி.மு.க. நகராட்சி கவுன்சிலரின் மோட்டார்சைக்கிள் மீது திராவகம் வீச்சு- போலீசார் விசாரணை

Update: 2022-06-28 14:01 GMT

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமையா மகன் பரமசிவம் (வயது 62). இவர் சங்கரன்கோவில் நகராட்சி 12-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலராக இருக்கிறார். சம்பவத்தன்று இரவு பரமசிவம் தனது மோட்டார்சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு தூங்க சென்று விட்டார். மறுநாள் காலையில் எழுந்து நடைபயிற்சி செல்வதற்காக மோட்டார்சைக்கிளை எடுத்தபோது அதன் சீட்டின் மீது ஈரமாக இருந்துள்ளது. எனவே மோட்டார்சைக்கிளில் தண்ணீர் ஊற்றி கழுவி விட்டு ஏறி உட்கார்ந்து கிளம்பி சென்று விட்டார். அங்கு சென்றதும் மோட்டார்சைக்கிள் `சீட்' கிழிந்து இருந்ததை பார்த்து திடுக்கிட்டார். மேலும் உடலில் காயம் இருந்தது. பின்னர் பார்த்தபோது வீட்டின் வெளியே நின்ற மோட்டார்சைக்கிள் மீது மர்ம நபர்கள் திராவகம் வீசி இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பரமசிவம் இதுகுறித்து நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்