கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் ஆப்பிரிக்கன் துலிப் பூக்கள்

கொடைக்கானலில் ஆப்பிரிக்கன் துலிப் பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன.

Update: 2022-11-05 15:50 GMT

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலின் அழகுக்கு அழகு சேர்க்கும் விதத்தில் பல்வேறு வண்ண பூக்கள் ஆங்காங்கே பூத்துக்குலுங்குவதை பார்க்கலாம். அந்த வகையில் தற்போது 'ஸ்பாத்தோடியா கம்முலேட்டா' என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஆப்பிரிக்கன் துலிப் மரங்களில் செந்நிற பூக்கள் கொத்து கொத்தாய் பூத்துக்குலுங்குகின்றன. கொடைக்கானல் ஆனந்தகிரி, உகார்த்தேநகர், வில்பட்டி, பேத்துப்பாறை மற்றும் மலைப்பாதைகளில் ஆப்பிரிக்கன் துலிப் மலர்கள் பூத்துள்ளன.

மனதை மயக்கும் இந்த பூக்கள், சுற்றுலாபயணிகளின் விழிகளுக்கு விருந்து படைப்பதாக உள்ளது. இது, வருடத்துக்கு ஒரு முறை மட்டும் பூக்கக்கூடிய தன்மை கொண்டது. சிகப்பு, மஞ்சள் நிறங்களில் துலிப் மலர்கள் பூக்கும். மலரில் சுற்றிலும் இதழ்கள் சூழ்ந்து, மையப்பகுதி தாமரை வடிவில் இருப்பது கூடுதல் சிறப்பு. பழனி, வத்தலக்குண்டு மலைப்பாதைகளின் வழியாக வாகனங்களில் பயணிக்கும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்த வண்ணம் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்