பாரதிதாசன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாரதிதாசன் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2023-04-29 18:45 GMT

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பாளையங்கோட்டை மகாராஜ நகரில் பாரதிதாசன் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டது. அங்கு தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில், பாரதிதாசன் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் மாநகர இளைஞர் அணி செயலாளர் சிவந்தி முத்துப்பாண்டி, பாளையங்கோட்டை ஒன்றிய இணை செயலாளர் பரமசிவபாண்டியன், பகுதி இளைஞர் அணி தலைவர் கே.எஸ்.ராஜா, டவுன் பகுதி தலைவர் அய்யப்பன், செல்வா, விஜயகுமார், முன்னாள் மகளிரணி செயலாளர் சர்மிளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பாரதிதாசன், தேவநேயப்பாவணர், திருவள்ளுவர் ஆகிய மூவருக்கும் நெல்லை மாநகரில் சிலைகள் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்